Skip to main content

இந்திய வம்சாவளி பள்ளி மாணவனுக்கு இங்கிலாந்தின் சிறப்புமிக்க இயற்பியல் பரிசு


இங்கிலாந்தில் இயற்பியல் ஆய்வுக்கு வழங்கப்படும் முக்கிய பரிசு இந்திய வம்சாவளி மாணவனின் சிறப்பு சார்பியல் கோட்பாடு தொடர்பான ஆய்வுக்கு கிடைத்துள்ளது.

கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் பிரதாப் சிங்
என்ற அந்த மாணவன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மிக பிரபலமான  சிறப்பு சார்பியல் கோட்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டான். இந்த செய்முறை விளக்கத்துடன் கூடிய ஆய்விற்கு 500 யூரோ பரிசு தொகை கொண்ட “இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ் ப்ரைஸ்” கிடைத்துள்ளது. இந்த பரிசுக்கான இறுதி சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த 11 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதுபற்றி பிரதாப் சிங் கூறுகையில், “சிறப்பான இந்த பரிசை பெற்றது சிலிர்ப்பாக உள்ளது. பள்ளியில் இருக்கும் பொருட்களை கொண்டே சிறப்பு சார்பியல் கொள்கையை விளக்க, ஒரு கணித மாடலை உருவாக்க முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.  
 இந்த ஆய்வுபற்றி பிரதாப் சிங் எழுதி இருக்கும் கட்டுரை இன்ஸ்டிடியூட் ஆப் பிசிக்ஸ் அமைப்பு நடத்தும் பத்திரிகையிலும் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா