Skip to main content

பி.எட்., படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு


பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:மே 8ம் தேதி - இந்திய சமூகத்தில் கல்வி; 9ம் தேதி - கற்றல் உளவியல் மற்று
ம் மனித வளர்ச்சி, 11ம் தேதி - கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாடு, 12ம் தேதி - விருப்ப பாடங்கள், 13, 14ம் தேதிகளில் மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.

மே 15ம் தேதி - முதுநிலைப் பட்டதாரி மாணவர்களுக்கான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் பாடத்தேர்வுகள் நடக்கும்.மே 16ம் தேதி - பட்டதாரிகளுக்கான கணிதம், உடற்கல்வி அறிவியல், உயிரி அறிவியல், வரலாறு, புவியியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கும்; மே 18ம் தேதி- முதுநிலைப் பட்டதாரிகளுக்கு, மேல்நிலைப் பள்ளிக்கல்வி தொடர்பான கணிதம், ஹோம் சயின்ஸ், உடற்கல்வி அறிவியல், வரலாறு, உயிரி அறிவியல், புவியியல், சமூக அறிவியல், வணிகம் மற்றும் கணிதப் பதிவியல், பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்