Skip to main content

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்


முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்,80, 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை
விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது. இலக்கிய உலகின் மிக உயரிய, 'ஞான பீடம்' விருது பெற்ற, ஜெயகாந்தன், சென்னை கே.கே.நகரில்,
குடும்பத்தாருடன் வசித்து வந்தார். கடந்த ஓராண்டாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு அவர் இறந்தார். ஜெயகாந்தனுக்கு மனைவி, மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயகாந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

காலணி கடையில் துவங்கிய எழுத்துப் பயணம்: விழுப்புரத்தில் அவரது மாமா வீட்டில் தங்கியிருந்த போது அவருக்கு பொதுவுடமைக் கோட்பாடுகளும், பாரதியின் எழுத்துகளும் அறிமுகமாகின. பின் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு குடிபெயர்ந்தார். அங்கு தனியார் அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் தஞ்சையில் காலணி விற்கும் கடையில் பணிக்கு சேர்ந்தார். இங்கு தான் அவரது எழுத்து பயணம் துவங்கியது. சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. 20ம் நூற்றாண்டில் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக போற்றப்பட்டார். இவரது நாவல்களில் "உன்னைப் போல் ஒருவன், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், யாருக்காக அழுதான், புதுச்செருப்பு கடிக்கும் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள்' ஆகியவை திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. சாகித்ய அகாடமி விருது, ஞான பீட விருது, பத்ம பூஷன், ரஷ்ய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு