Skip to main content

கொத்து கொத்தாக போலி வாக்காளர்கள்: மாணவர்கள் உதவி கேட்கும் தேர்தல் கமிஷன்


வாக்காளர் பட்டியலில் போலிகள் அதிகமாக உள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது.
துறை அதிகாரிகள்:

தமிழக வாக்காளர் பட்டியலை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் மூலம், சமீபத்தில் ஆய்வு செய்ததில், ஒன்றுக்கும்
மேற்பட்ட இடங்களில், ஏராளமான வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது; பெயர் குழப்பம், முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் போன்ற பிழைகளும் கண்டறியப்பட்டுள்ளன. எனவே, பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி அதிகாரிகளின் உதவியை, தேர்தல் கமிஷன் நாடியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள் மூலம், போலி வாக்காளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, கல்வி துறை அதிகாரிகளுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:

எச்சரிக்கை:

போலி பதிவால் ஏற்படும் சட்ட ரீதியான பின் விளைவுகள் குறித்து, வாக்காளரை எச்சரிக்கை செய்ய, கல்வி துறையை தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் வரை கல்லூரி மாணவ, மாணவியரும், பள்ளிகள் திறந்த பின், ஜூலை வரை பள்ளி மாணவ, மாணவியரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா