Skip to main content

ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்


ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது. 

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:நம் நாட்டில், தினமும், 20 லட்சம் பேர் ரயி
ல்களில் பயணிக்கின்றனர். இவர்களில், 52 சதவீதம் பேர், இணையதளம் மூலம் டிக்கெட் 'புக்' செய்து பயணிப்பவர்கள். இவர்களுக்கு மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பயணிகளின் உடைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இன்சூரன்ஸ் திட்டத்தை
அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, லேப் - டாப், மொபைல் போன் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பயணிகள் எடுத்துச் செல்லும்போது, ரயிலில் திருடு போய் விட்டால், அதற்கு காப்பீடு தொகை தரப்படும். 
'நியூ இந்தியா அஸ்யூரன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., இணைய தளத்தில் டிக்கெட் 'புக்' செய்யும்போது, இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர விரும்பினால், அதற்குரிய பகுதியை பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால், இன்சூரன்ஸ் திட்டத்தில் சேருவது கட்டாயமல்ல. இந்த திட்டம் எப்போது முதல் செயல்பாட்டுக்கு வரும் என்பது, பின்னர் அறிவிக்கப்படும். மேலும், ரயில் பயணத்தின்போது பயணிகளுக்கு தேவையான உணவுகளை வழங்கும் நடைமுறை, தற்போது குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே அமலில் உள்ளது. இந்த திட்டம், மேலும் பல ரயில்
களுக்கும் விரிவு படுத்தப்படும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா