" தமிழகத்தில் அனுமதியின்றி 5 ஆயிரம் நர்சிங் பள்ளிகள் செயல்படுகின்றன,” என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகள் சங்க மாநிலத்தலைவர் பாலாஜி தெரிவித்தார்.திண்டுக்கல்லில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தி
ல் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 25 அரசு நர்சிங் பள்ளிகள் உட்பட 200 மட்டுமே
அங்கீகாரம் பெற்றவை. இவற்றில் 3 ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 5 ஆயிரம் போலி நர்சிங் பள்ளிகள் இயங்குகின்றன.இவை கேரளாவில் தடைசெய்யப்பட்ட அறக்கட்டளை மூலம் செயல்படுகின்றன. இங்கு 10 ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் கூட சேர்த்து கொள்ளப்படுகின்றனர். 10 க்கு 10 அடி அறையில் பள்ளியை நடத்துகின்றனர்.
இதில் பயின்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகம், நர்சிங் கவுன்சிலில் பதிய முடியாது. இதனால் 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அரசு உத்தரவு இருந்தும் போலிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குகின்றனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 7 ஆயிரம் நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நர்சிங் பள்ளிகளில் படித்தோருக்கு மாவட்டந்தோறும் இலவச பயிற்சி அளிக்க உள்ளோம். அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் விபரங்களை www. tamilnadunursingcouncil.com ல் தெரிந்து கொள்ளலாம், என்றார்.