பணி நீக்கத்தால் உருவான 652 கணினி ஆசிரியர் காலியிடத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, சி.இ.ஓ., அலுவலங்களில் நாளை (ஏப்.,4) கவுன்சிலிங் நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்தவர்களுக்கு ஏ
ப்.,4ல் அந்தந்த சி.இ.ஓ., அலுவலகங்களில் ஆன்-லைன் கவுன்சிலிங் காலை 10 மணிக்கு துவங்குகிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு, தேர்ச்சி பெற்றமைக்கான சான்று, அசல் கல்விச் சான்று, சாதி சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் ஒரு மணி நேரத்திற்கு முன்பே கவுன்சிலிங் மையத்திற்கு வர வேண்டும் என, சி.இ.ஓ., அலுவலக ஊழியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு