Skip to main content

3 முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

முதன்மை கல்வி அதிகாரி அந்தஸ்தில் நிதி அமைச்சரிடம் தனி அதிகாரியாகபணிபுரிந்த பாஸ்கர சேதுபதி இணை இயக்குனர் (தொழில்கல்வி) ஆக பதவி உயர்வு பெற்றார். சேலம் முதன்மை கல்வி அதிகாரி செல்வக்குமார், மதுரை பிற்பட்டோர் மற்றும் கள்ளர் சீரமைப்பு து
றை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி பொன்னையா பதவி உயர்வு பெற்று இணை இயக்குனர் (நாட்டு நலப்பணி திட்டம்) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனர் உஷாராணி அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனராக மாற்றப்பட்டார். அனைவருக்கும் கல்வி திட்ட இணை இயக்குனர் குப்புசாமி மாற்றப்பட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிச்சாரா வயது வந்தோர் கல்வி இயக்க இணை இயக்குனர் சுகன்யா நூலக இணை இயக்குனர் கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார். இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி