Skip to main content

ராணுவத்தில் 334 ஹவில்தார் பணியிடங்கள்


இந்திய ராணுவத்தில் ஹவில்தார் பணிக்கு 334 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுகலை படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

ராணுவம் நமது நாட்டின் பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. ரா
ணுவத்தின் தரைப்படை பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'ஆர்மி எஜூகேசன் கார்ப்ஸ்' எனப்படும் கல்விப் பிரிவில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இந்திய குடியுரிமை பெற்ற, முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.

பணியின் பெயர் : ஹவில்தார்
பணியிடங்கள் : 334
வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆட்தேர்வு நடைபெறும் முதல் நாளை அடிப்படையாகக் கொண்டு இந்த வயது வரம்பு கணக்கிடப்படும். ராணுவ பணியில் இருப்பவர்கள் 28 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.


கல்வித் தகுதி:

எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.ஏ., பி.டெக் போன்ற அறிவியல், கலை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

கல்வியில் பெற்ற மதிப்பெண்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு முறைக்கு அழைக்கப்படுவார்கள். உடல்திறன், மருத்துவ பரிசோதனையில் தகுதி உடையவர்கள் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் 'டீச்சிங் ஆப்டிடியூடு டெஸ்ட்' மற்றும் நேர்காணலுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்திலும் தேர்ச்சி பெறுபவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஓராண்டு பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். இதற்கான எழுத்து தேர்வு 26-7-2015 அன்று நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 

விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள் HQ Trg Zone, Fort Saint George, Chennai- 600009  என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் முகப்பில்“APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 15-5-2015
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 26-7-2015
மேலும் விரிவான விவரங்களை ஏப்ரல் 18-24 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்