Skip to main content

சாலை ஆய்வாளர் காலி பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஏப். 30 கடைசி நாள்


சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 9 சாலை ஆய்வாளர் பணியிடங்களை மாவட்ட அளவிலான போட்டித் தேர்வின் மூலம் நிரப்ப விண்ணப்பங்கள் அனுப்புவதற்கு
கடைசி தேதி ஏப். 30 என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
   அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
     ஒன்பது சாலை ஆய்வாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள், ஐடிஐ  பட்டயப் படிப்பில் சிவில் டிராப்ட்ஸ்மேன் கல்வித் தகுதியுடன் 1.7.2012 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.    இதற்கு கீழ்க்கண்ட வகுப்பைச் சார்ந்தவர்களிடமிருந்து உரிய ஆவணங்களுடன் ஏப். 30 க்குள் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளர்ச்சிப் பிரிவில்  விண்ணப்பங்கங்களை வழங்க வேண்டும்.     மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களும், பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம்.
 அனைத்து வகுப்பைச் சார்ந்த (பொது) முன்னுரிமையற்றவர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) வகுப்பைச் சேர்ந்த பெண், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், பிற்பட்டோர் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வகுப்பைச் சேர்ந்த முன்னுரிமையற்றவர், அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்,  ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த  முன்னுரிமையற்றவர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பெண், பிற்பட்டோர் (முஸ்லிம் அல்லாதவர்கள்) வகுப்பைச் சேர்ந்த பெண் மற்றும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண் ஆகிய இனச்சுழற்சியில் தலா ஒரு பணியிடம் வீதம் நிரப்பப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி