Skip to main content

பள்ளி மாணவர்களுக்கு ஏப்.25-இல் மாதிரி வடிவமைப்பு பயிலரங்கம்


தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாதிரி வடிவமைப்பு குறித்த பயிலரங்கம் வரும் 25,26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் வெளியி
ட்டுள்ள செய்திக் குறிப்பு:
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையத்தில் நடைபெற உள்ள இந்த மாதிரி வடிவமைப்பு பயிலரங்கில் 8-ஆம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த பயிலரங்கம் நடைபெறும்.
இதில் வரும் 25-ஆம் தேதி முதலாவது பிரிவு மாணவர்களுக்கும், 26-ஆம் தேதி இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கும் பயிலரங்கம் நடைபெறும்.
இதில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது பெயர்களை வரும் 23-ஆம் தேதிக்குள் 044-24410025 என்ற தொலைபேசி எண்ணிலோ, நேரில் வந்தோ பதிவு செய்து கொள்ள வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2