Skip to main content

2.4 லட்சம் இன்ஜி., விண்ணப்பம் தயார்: திருநங்கையர் தனியே விண்ணப்பிக்கலாம்


வரும் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்புக்கு, 2.40 லட்சம் விண்ணப்பங்கள் தயாராக உள்ளன; இந்த ஆண்டு முதல், திருநங்கையர் தனியாக விண்ணப்பிக்க அண்ணா பல்கலை வசதி செய்துள்ளது.

அடுத்த வாரம் அறிவிக்க...:

இந்த விண்ணப்பங்களை நேரிலும், அஞ்சல் மூலமும் பெறலாம். வி
ண்ணப்பக் கட்டணம் மற்றும் வழங்கும் தேதியை, அடுத்த வாரம் அறிவிக்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், அரசு கல்லூரி கள் உட்பட பல மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும். சென்னையில் அண்ணா பல்கலை வளாகத்தில், 25 கவுன்டர்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு, தனி கவுன்டர்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு, விண்ணப்பக் கட்டணம், கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. படிப்புகளிலும், ஒன்றிரண்டு பாடங்கள் மட்டுமே புதிதாக இடம் பெறும் என்று தெரிகிறது. விண்ணப்பத்தில், இந்த ஆண்டு புதிய மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஆண், பெண் மாணவ, மாணவியர் தவிர, திருநங்கையர் தனியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.


கூடுதலாக...:

விண்ணப்பத்தில், 'ஆண் / பெண்' என்ற இடத்தில், கூடுதலாக, 'திருநங்கையர்' பகுதி சேர்க்கப்பட்டு உள்ளது. திருநங்கையர் தங்களை தனியே குறிப்பிட்டு, 'அட்மிஷன்' பெறலாம். இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்ட போது, 'திருநங்கையருக்கு தனியாக, விண்ணப்பத்தில் இடம் தரப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு வழக்கமான, 'கட் - ஆப், ரேங்கிங், ரேண்டம்' எண் மற்றும் சாதி வாரி அடிப்படையில் தான், 'சீட்' ஒதுக்கீடு செய்யப்படும்; தனி ஒதுக்கீடு கிடையாது. அவர்களுக்கு சான்றிதழில், 'திருநங்கையர்' என்பதை குறிப்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது' என்றனர்.

இன்ஜி., கல்லூரிகள் எத்தனை?

பொறியியல் கல்லூரிகள் 596 

அண்ணா பல்கலை 16 

மாணவர் சேர்க்கை இடங்கள் 2.25 லட்சம் 

அரசு ஒதுக்கீடு, தனியார் சிறுபான்மை கல்லூரிகளில், 

50 சதவீதம்; மற்ற கல்லூரிகளில், 65 சதவீதம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்