Skip to main content

மாற்றுத் திறனாளிகளுக்கான படிவம்: 23 ரயில் நிலையங்களில் இனி பெறலாம்

இ-டிக்கெட் மூலம் ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கான படிவங்களை தமிழகத்தின் 23 ரயில் நிலையங்களில் மாற்றுத் தி
றனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தப் படிவங்களை அந்தந்த ரயில் நிலையங்களில் மே 1-ஆம் தேதி முதல் ஜூலை-1 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்தப் படிவங்கள் செவ்வாய், வியாழக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படிவங்கள் சரி பார்க்கப்பட்டு, மூன்று வாரங்களில் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். பின்பு, ரயில்வே கோட்ட அலுவலகத்துக்குச் சென்று தங்களது அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஏன் அடையாள அட்டை?
ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
இதற்காக மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை, வயது வரம்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப் படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவிலும், ரயில் நிலையங்களிலும் அணுக வேண்டும்.
இந்த அடையாள அட்டையை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக் கூடாது. ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படிவங்கள் வழங்கப்படும் ரயில் நிலையங்கள்
அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, ஈரோடு, கரூர், திருப்பூர், கோவை, ஊட்டி, திண்டுக்கல், விருதுநகர், மானாமதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாகர்கோவில், புதுச்சேரி.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா