Skip to main content

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்

பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்
பிளஸ் 2 பொருளாதார பாடத் தேர்வில் 2 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக
அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
 பிளஸ் 2  பொருளாதார பாட விடைத்தாள் திருத்துவதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்நாடு முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் எம்.சந்திரன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
 மனுவில், பிளஸ் 2 பொருளாதார பாடத்தேர்வு கடந்த மார்ச் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் "ஏ' பிரிவில்  ஒரு மதிப்பெண் கேள்விகளில் 18, 20 ஆம் கேள்விகள் தவறானதாகவும் விடையளிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும் "டி' பிரிவில் 78 ஆவது கேள்வி கடினமானதாக உள்ளது. 20 மதிப்பெண்கள் அளிக்கக்கூடிய இந்தக் கேள்வி, தலா 10 மதிப்பெண் அளிக்கக்கூடிய இரு கேள்விகளை ஒருங்கிணைத்து கேட்கப்பட்டுள்ளது. பாடப் புத்தகத்தில் உள்ள 10 பக்கங்களில் இருந்து விடையளிக்கக் கூடியதாக இந்தக் கேள்வி உள்ளது.
குறிப்பிட்ட கேள்விக்கான விடை பொருளாதார பாடத்தில் தேவை, விநியோகம் என்ற பாடத்தில் உள்ளது.    புத்தகக் குழு பரிந்துரைப்படி இந்தப் பாடத்தில் இருந்து புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் கேள்வி கேட்கப்பட வேண்டும். ஆனால் பயன்பாடு அடிப்படையில் கேள்வி இடம் பெற்றுள்ளது. இது தவறாகும். கடந்த 10 ஆண்டுகளாக இது போன்ற  கடினமான கேள்வி கேட்கப்படவில்லை. எனவே வடிவமைப்பு விதிகளுக்கு மாறாக கேள்வி கேட்கப்பட்டு உள்ளதால் 18, 20, 78 ஆவது கேள்விகளுக்கு விடையளித்து இருந்தால் அவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண்களை வழங்க உத்தரவிட வேண்டும். விடைகளில் தகுந்த மாற்றம் செய்யும் வரையில் விடைத்தாளை திருத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.
 இம்மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, "ஏ'  பிரிவில் 18, 20 ஆவது கேள்விகளுக்கு விடையளித்துள்ள அனைவருக்கும் கருணை மதிப்பெண் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு

10ம் வகுப்பு துணைத்தேர்வு தக்கலில் விண்ணப்பிக்க ஏற்பாடு

கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்காக ஜூன், ஜூலை மாதங்களில் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது. கடைசி நாள் வரை விண்ணப்பிக்காதவர்கள்