Skip to main content

10ம் வகுப்பு அறிவியல் தேர்வு 'ஈசி': 'சென்டம்' அதிகரிக்கும்


பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால், இந்த ஆண்டு நூற்றுக்கு நூறு, 'சென்டம்' எடுப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், நேற்று அறிவியல் தேர்வு நடந்தது.
இதில் மொத்தம், 75 மதிப்பெண்களுக்கு, 'சாய்ஸ்' உட்பட, 53 வினாக்கள் இடம் பெற்றன; இரண்டு 'டயாக்ராம்' வினாக்களுடன், பல சுவாரஸ்யமான வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீர்த்தட்டுப்பாடு ஏற்படக் காரணம்; நீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முறை; கிராமங்களில் அதிகம் பரவிய மற்றும் பெரும்பாலான மக்களை தாக்கிய நோய் எது என்று எலிக்காய்ச்சல், டெங்கு மற்றும் சிக்குன் குனியா கொடுக்கப்பட்டிருந்தன; ஆதி மனிதன் தோன்றிய நாடு எது; கருப்பு வைரம் எது; மலேரியா கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் போன்ற கேள்விகள் இடம் பெற்றிருந்தன. தேர்வு முடிந்து வந்த மாணவ, மாணவியர் கூறுகையில், 'வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது; அனைத்துக் கேள்விகளும் விடைகள் தெரிந்தவையாகவே இருந்தன;
பரீட்சைக்கு முறையாக தயாரான, பெரும்பாலான மாணவ, மாணவியர் சென்டம் வாங்குவோம்' என்றனர். ஆசிரியர்கள் கூறுகையில், 'அறிவியல் தேர்வு வினாத்தாள், 'ஈசி'யாக இருந்தது; ஏற்கனவே, கணித வினாத்தாளும் எளிதாக இருந்ததால், இரு பாடத்திலும் அதிக மாணவர்கள், முழு மதிப்பெண் பெறுவர். இதனால், வரும் கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சேர போட்டி ஏற்படும்' என்றனர்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா