Skip to main content

1,000 குரூப் - 2 பணியிடங்களுக்கு இம்மாத இறுதியில் தேர்வு


தமிழக அரசுத் துறையில், 1,000 குரூப் - 2 பணியிடங்கள் மற்றும் 60 குரூப் - 1 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) தலைவர் பாலசுப்பிரமணியன் கூறினார்.
உயர் நீதிமன்றத்தில்:

தட்டச்சர் பணி, தோட்டக்கலை அலுவலர் பணி மற்றும் குரூப் - 2
பணிகள் ஆகியவற்றுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கூறியதாவது: 
டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுப் பணிகள் முன்பை விட விரைவுபடுத்தப்பட்டு, மிகவும் வெளிப்படையான முறையில் நடக்கிறது; தேர்வு முடிவுகள் தாமதமின்றி வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு நடந்த மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், இவ்வார இறுதியிலும், குரூப் - 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியிலும் வெளியிடப்படும். ஏற்கனவே தகுதித் தேர்வு நடத்தப்பட்ட, குரூப் - 1 பதவிகளுக்கு, மே 2, 3 மற்றும் 4ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆண்டு அரசுத் துறைகளில், 50 ஆயிரம் காலியிடங்கள் உருவாக வாய்ப்புள்ளது. புதிய பணி நியமனத்துக்கான பட்டியல், அலுவலர் தேர்வுக் குழு பட்டியலின் படி நடக்கும். குரூப் - 2 பதவிகளுக்கு, 1,000 இடங்கள் காலியாக உள்ளன. இதேபோல், சப் - கலெக்டர், போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் வணிகவரி அதிகாரி போன்ற, குரூப் - 1 பதவிகளுக்கு, 60 இடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான தேர்வு தேதி, இம்மாத இறுதிக்குள் வெளியிட வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்