Skip to main content

10 பாடங்களின் விடைத்தாள் இன்று திருத்தம்: கருணை மதிப்பெண் கிடைக்குமா?

பிளஸ் 2 தேர்வில், 10 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம் இன்று துவங்குகிறது; இப்பணி வரும் 14ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது; கணிதம், விலங்கியல், வேதியியல் தேர்வுகளுக்
கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம், 8.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மொழிப்பாடங்கள் மற்றும் முதற்கட்ட முக்கியப் பாடங்களுக்கான திருத்தம், மார்ச் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது. ஐந்து நாட்களாக அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால், விடைத்தாள் திருத்தம் நிறுத்தப்பட்டு இருந்தது; இன்று முதல், மீண்டும் விடைத்தாள் திருத்தம் துவங்க உள்ளது. மாணவர்களின் உயர்கல்வியை நிர்ணயிக்கும் முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், விலங்கியல், வரலாறு, வணிகக் கணிதம், உயிரியல், பொருளியல், வணிகவியல், வேதியியல் மற்றும் கணிதப் பதிவியல் உள்ளிட்ட, 10 பாடங்களுக்கு, விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. திருத்தப் பணிகளை, ஏப்., 14க்குள் முடிக்க, தேர்வுத் துறை திட்டமிட்டு உள்ளது. முக்கியப் பாடங்களைப் பொறுத்தவரை, விலங்கியல், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களின் வினாத்தாள்கள், கடினமாக இருந்ததாகவும், சில கேள்விகள் குழப்பமாக இருந்ததாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் புகார் எழுந்தது. இந்நிலையில், இன்று வழங்கப்படும் மதிப்பீட்டு முறையில், கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து, உரிய உத்தரவுகள் வருமா என்று, ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர். கருணை மதிப்பெண் கிடைக்குமா என, மாணவ, மாணவியரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா