Skip to main content

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு


சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.தாண்டவன் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்
றது. கூட்டம் முடிந்ததும் துணைவேந்தர் ஆர்.தாண்டவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

4 புதிய துறைகள்

2015-16-ம் ஆண்டுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் வரவு-செலவுக்கு (பட்ஜெட்) ரூ.146 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வளர்ச்சிக்காக ரூ.5 கோடியே 50 லட்சத்தை பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கி உள்ளது. அந்த நிதியை செலவழிக்க சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.


அதுபோல சென்னை பல்கலைக்கழகத்தில் புதிதாக நீர் மேலாண்மை, உளவியல் கலந்தாய்வுத்துறை, அழிந்து வரும் மொழிகளை பாதுகாக்கும் துறை உள்பட 4 துறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அந்த துறைகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதிகொடுத்த உடன் அந்த துறைகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு துறைக்கும் ஒரு பேராசிரியர், 1 கூடுதல் பேராசிரியர், 2 விரிவுரையாளர்கள் ஆகியோர் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். மொத்தத்தில் 16 பேர் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக ரூ.35 கோடி செலவு ஆகும்.

ஆன்லைன் மூலம் தேர்வு

தொலைதூர கல்வியை பொறுத்தவரை அனைத்தும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தல், இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுதல், தேர்வு முடிவு வெளியிடுதல் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இணையதளமாக்கப்பட்டுள்ளன.

இனிமேல் தொலைதூர கல்வியில் ஆன்லைனில் தேர்வை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். அதனால் விடைத்தாள் தேவை இல்லை. மை கொண்டும் எழுதவேண்டியதில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு பேராசிரியர் ஆர். தாண்டவன் தெரிவித்தார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா