Skip to main content

பதவி உயர்வு பட்டியலில் கல்வி தகுதி இல்லாதவர்கள்: புள்ளியியல் துறையினர் அதிர்ச்சி

புள்ளியியல் துறையில், உரிய கல்வித் தகுதி பெறாதவர்களின் பெயர்கள், புள்ளியியல் அலுவலர் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழக அரசின் புள்ளியியல் துறையில், உதவி ஆய்வாளர்,
ஆய்வாளர், அலுவலர் என, அடுத்தடுத்த பணியிடங்கள் உள்ளன. இதில், உதவி ஆய்வாளர் பணிக்கு, பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் பாடங்களில், ஏதேனும் ஒன்றில், பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வாளர் பணிக்கு, நேரடி நியமனம் மற்றும் பணிமூப்பு பெறும் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இது தவிர, கள அனுபவம்,உதவி ஆய்வாளர்களுக்கு இணையான சம்பளம் என்ற அடிப்படையில், துறையின் அமைச்சுப் பணியாளர் பிரிவைச் சேர்ந்த உதவியாளர்களுக்கும், 20 சதவீத பணியிடம் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அமைச்சுப் பணி உதவியாளராக இருந்து, ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்கள், அலுவலர் பதவி உயர்வு பெற, பொருளாதாரம், கணிதம், புள்ளியியல் பாடங்களில் ஏதேனும் ஒன்றில், பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதுசிறப்பு விதி. இந்நிலையில், புள்ளியியல் துறை சார்பில், பிப்., 23ம் தேதி, அலுவலர் பதவி உயர்வுக்கான, 82 பேர் பட்டியல் வெளியானது. அதை பார்த்த ஆய்வாளர் பலர் அதிர்ச்சி அடைந்தனர். அதில், பட்டப் படிப்பு தகுதி பெறாத, 12 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது தான், அதற்கு காரணம்.

இதுகுறித்து, புள்ளியியல் ஆய்வாளர் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பதவி உயர்வு பெற்ற, 12 பேரும், 10ம் வகுப்பு மற்றும் பி.யு.சி., முடித்தவர்கள். அலுவலராக இவர்களுக்கு பதவி உயர்வுக்கு சிறப்பு அனுமதி அளிக்க,அரசுக்கு, புள்ளியியல் துறை கடிதம் எழுதி உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டால் மட்டுமே, பட்டியலில் சேர்க்க வேண்டும். ஆனால், முன்கூட்டியே பட்டியலில் சேர்த்து உள்ளனர். பட்டப்படிப்பு முடித்த பலர், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் போது, இவர்களை பட்டியலில் சேர்த்தது அதிர்ச்சியாக உள்ளது. 

இவ்வாறு, வட்டாரத்தில் கூறப்படுகிறது 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி