Skip to main content

வேர்ட் சில ஷார்ட் கட் கீகள்:

ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்:
Alt O, B : தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Alt O, E : ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய
எழுத்தைப் பெரிய எழுத்தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.
Alt O, C: காலம், செக் ஷன் என்றழைக்கப் படுகிற பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில் அழுத்தலாம். column format என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 
Alt O, D : ஆவணத்தில் பத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும் டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் பத்தியின் முதல் எழுத்து மாற்றப்படும். 

செல் டெக்ஸ்ட் மாற்றம்
வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.
1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடவும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும். 
2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்திடவும். டெக்ஸ்ட் டைரக் ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செயல்பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பினைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத்திடவும். அடுத்து, ரிப்பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment groupல், Text Direction என்ற டூலினைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.

எழுத்து தொடர்பான ஷார்ட் கட் கீகள்
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F
எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>
எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<
எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]
எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[
பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3
அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+A
எழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+B
அடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+U
ஒரு சொல்லை அடிக்கோடிட CTRL+SHIFT+W
சாய்வெழுத்து அமைக்க / நீக்க CTRL+I
எழுத்தை சிறிய கேபிடல் எழுத்தாக அமைக்க CTRL+SHIFT+K
தொகுப்பை மூட ALT+F4
அனைத்து விண்டோவினையும் சுருக்கி வைக்க Win logo key+M
டெக்ஸ்ட் இரு கோடுகளில் அடிக்கோடிட CTRL+SHIFT+D

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்