Skip to main content

சிலிண்டர் பாய் கட்டாய வசூல் செய்தால் ,நிறுவனத்தின் லைசென்ஸ் இரத்து செய்யலாம் !


25 லட்சம் 'காஸ்' சிலிண்டர்; 12 ஆயிரம் ஊழியர்; ஒரு நாளைக்கு ரூ.7.5 கோடி வசூல்! வீடுதோறும் சப்ளையில் நடக்கும் கொள்ளையோ கொள்ளைகாஸ் ஏஜன்சிகளில் பணிபுரியும், 12 ஆயிரம் ஊழியர்கள், ஒரு நாளைக்கு
, 25 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்வதன்
மூலம், மக்களிடம் இருந்து, 7.50 கோடி ரூபாய் கட்டாய வசூல் செய்கின்றனர்.
தமிழகத்தில், பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, வீடு, 1.53 கோடி; வணிகம், 25 லட்சம் என, மொத்தம், 1.78 கோடி சமையல்காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1,200 காஸ் ஏஜன்சிகள் உள்ளன. ஒரு ஏஜன்சிக்கு, 8,000 - 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்; 10 ஊழியர் பணிபுரிகின்றனர். தினமும் சராசரியாக, 25 லட்சம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. காஸ்ஏஜன்சிக்கு, எண்ணெய் நிறுவனங்கள், ஒரு சிலிண்டருக்கு, வீடு, 44.60 ரூபாய்; வணிகம், 44.80 ரூபாய் கமிஷன் தொகை வழங்குகின்றன. இதில், 18 ரூபாய், வாடிக்கையாளர் இடத்திற்கு, சிலிண்டர் கொண்டு செல்வதற்காகவழங்கப்படுகிறது.

ஆனால், ஏஜன்சி ஊழியர்கள், வீடுகளுக்கு, சிலிண்டர் வினியோகம் செய்யும்போது, 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை, கட்டாய பணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு நாளைக்கு, 25 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்வதன் மூலம், 7.50 கோடி ரூபாய், கட்டாயமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது: சிலிண்டர் சப்ளை செய்யும் போது, தூக்கி வரும் சுமையை கருத்தில் கொண்டு, ஊழியருக்கு, 'பில்' தொகையுடன், விருப்பப்பட்டு, 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. ஆனால், 50 ரூபாய் கொடுக்குமாறு, ஏஜன்சி ஊழியர்கள், அதிகாரமாக கூறுகின்றனர். அதை கொடுக்க மறுத்தால், அடுத்த சிலிண்டரை, குறித்த நேரத்தில் வினியோகம் செய்வதில்லை. வீட்டில் ஆள் இருந்தாலும், 'சிலிண்டர் கொண்டு வரும் போது, உங்கள் வீடு பூட்டி இருந்ததால், உங்கள் சிலிண்டரை ரத்து செய்து விட்டோம். புதிதாக பதிவு செய்யுங்கள்' என, அலைக்கழிக்கின்றனர். ஏஜன்சி உரிமையாளர்களிடம் புகார் தெரிவித்தும், பலன் இல்லை, என்றார்.

எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெட்ரோலிய அமைச்சகத்தின், 'மார்க்கெட் டிசிப்ளின் கைட்லைன்ஸ்' விதிப்படி, மக்களிடம், சிலிண்டர் வினியோகம் செய்யும் போது, 'பில்' தொகையை விட, கூடுதல்பணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு பணம் வசூலித்தால், அபராதம் முதல், ஏஜன்சி உரிமம் ரத்து வரை நடவடிக்கை எடுக்க முடியும். காஸ் ஏஜன்சிகளுக்கு சென்று, வாடிக்கையாளர் நேரடியாக, சிலிண்டர் வாங்கும் போது, அதற்கு, ஏஜன்சி தரப்பில், 18 ரூபாய் தர வேண்டும். எனவே, கட்டாய பண வசூல் மற்றும்பணம் தராதது குறித்து, மக்கள், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களிடம், எழுத்துபூர்வமாக புகார் அளித்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு