Skip to main content

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு: தமிழக அரசுக்கு பதில் அளிக்க அவகாசம் அளித்து ஒத்திவைப்பு.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மற்றும் இடஒதுகீட்டை ரத்து செய்யக் கோரித் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் 2 வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையிலான அமர்வு முன் விசா
ரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம்சார்பில், பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு கோரப்பட்டது.இதனையடுத்து, 2 வாரம் கால அவகாசம் அளித்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால், தகுதிவாய்ந்தவர்கள், தகுதியிழப்புச் செய்யப்படுவதாகவும், எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, லாவண்யா உள்ளிட்ட பட்டதாரிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் பதிலளிக்குமாறு ஏற்கனவே, தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி