Skip to main content

துறைத்தேர்வுக்கு அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம்


அரசு ஊழியர்கள் பதவி உயர்வுக்கான துறைத்தேர்வுகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.
ஷோபனா வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஆன்-லைன் விண்ணப்பம்

தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு தகுதிக்காக ஆண்டுக்கு இரு முறை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான முதலாவது துறைத்தேர்வுகள் மே 24-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. துறைத்தேர்வு எழுத விரும்பும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஆன்-லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31-ம் தேதி ஆகும்.

ஆகஸ்ட் மாதம் தேர்வு முடிவு

தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை மே 17 முதல் ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 7, 16-ம் தேதியிட்ட டிஎன்பிஎஸ்சி செய்தி வெளியீட்டில் வெளியாகும். இவ்வாறு ஷோபனா கூறியுள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா