Skip to main content

மின் கட்டண கூடுதல் வைப்பு கணக்கிடும் முறை


மின் கட்டண கூடுதல் வைப்புத் தொகையை எப்படி கணக்கிடுவது என்பது குறித்து மின்வாரியம் தெரிவித்துள்ளதாவது; மின் நுகர்வோர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என ஆறு மாதங்கள் செலுத்திய மின்
கட்டணத்தை 12 ஆல் வகுத்து அதில் வரும் தொகையை மூன்றால் பெருக்க வேண்டும். இவ்வாறு வரும் எண்ணை தனியாக வைத்து கொள்ள வேண்டும். பின், இருப்பில் உள்ள வைப்பு தொகைக்கு 9 சதவீதம் வட்டி சேர்த்து அதில் வரியை கழிக்க வேண்டும். இதில் ஒரு எண் கிடைக்கும். இதையடுத்து இரண்டு தனி எண்களையும் கழித்தால் வர கூடியது, கூடுதல் காப்பு வைப்பு தொகை. ஏற்கனவே உள்ள வைப்பு தொகையுடன் ஒப்பிடும்போது கூடுதல் வைப்பு தொகை குறைவாக இருந்தால் கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை. இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொழிற்சாலைக்கு ஆண்டுதோறும்; குடியிருப்புக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கப்படுகிறது. கூடுதல் வைப்பு தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற விவரம் மின் நுகர்வோரின் ஆண்டு மின் பயன்பாடு கணக்கின் அடிப்படையில் வசூல் செய்யப்படும்.கூடுதல் காப்பு தொகை வசூலிக்கும்போது மின் பயன்பாடு அதிகரித்திருந்தால் கூடுதல் தொகை; மின் பயன்பாடு குறைந்திருந்தால் வைப்பு தொகை திரும்ப வழங்கப்படும். இதை மின் நுகர்வோர் மூன்று தவணைகளில் செலுத்தலாம். இந்த விவரம் மின் கட்டண மையங்களில் மின் கட்டணம் செலுத்தும்போது வழங்கப்படும் ரசீதில் தெரிவிக்கப்பட்டு ஏப்., மே மாதங்களில் கூடுதல் வைப்பு தொகை வசூல் செய்யப்படும், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்