Skip to main content

அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு பிரபல ஓவியர் மூலம் ஒரு நாள் பயிற்சி


சேலம் மாவட்ட அரசு பள்ளி ஓவிய ஆசிரியர்களுக்கு, பிரபல ஓவியர் மூலம், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில், ஓவிய ஆசிரியர் பணியிடங்களும், அதற்கான பாட
நேரமும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட தனித்தனி பாடவாரியாக, பல்வேறு திட்டங்களின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஓவிய ஆசிரியர்களுக்கும், ஒரு நாள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக கலை பண்பாட்டு மையத்தின் சார்பில், மார்ச், 14ம் தேதி காலை, 10 மணி முதல், மாலை, 4 மணி வரை, சேலம் ஸ்வர்ணபுரி வி.எம்.கே., அண்டு வி.எம்.ஜி., திருமண மண்டபத்தில் நடத்தப்படும் இப்பயிற்சியில், தமிழகத்தின் பிரபல ஓவியர் மணியம் செல்வம் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கிறார். இதில், அரசு, நகரவை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், அனைத்து வகை ஓவிய ஆசிரியர்களும் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி