Skip to main content

பயணிகள் வாட்ஸ்அப்பில் புகார்களை அனுப்பலாம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு


ரயில் பயணிகள் தங்கள் பிரச்னைகளை புகார்களாக எஸ்எம்எஸ் மூலமாக மட்டுமின்றி, வாட்ஸ்ஆப், இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்
வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, புகார் மேலாண்மை சேவையை ரயில்வே தலைமை அலுவலகமான ரயில்பவனில் தொடங்கி வைத்தார். அதன் மூலம் பல்வேறு வகைகளில் பயணிகள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,
ஆன்ட்ராய்டு மென்பொருள் உள்ள செல்போன்களை வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம். ரயில் பயணத்தின்போது புகார் தெரிவிப்பவர்கள் பிஎன்ஆர், வண்டி எண், ரயில்நிலையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் புகார் தெரிவிக்கலாம், கோட்டம், மண்டல வாரியாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். புகார்கள் மட்டுமின்றி ஆலோசனைகளையும் தரலாம். வாட்ஸ்ஆப் மூலம் இந்த சேவையை பெற www.coms.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக பதிவு செய்யலாம் அல்லது 97176 30982 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இணைய தளம் மூலமாக புகார் தெரிவிக்கும் வசதி உள்ளவர்கள், விரும்புபவர்களும் இந்த www.coms.indianrailways.gov.in என்ற இணையதளத்தையே பயன்படுத்தலாம். புகார், கருத்துகளை பரிமாற ஏற்கனவே மண்டல வாரியாக ஃபேஸ்புக் வசதி உள்ளது. இந்த எந்த வசதியும் இல்லாதவர்கள் 97176 30982 என்ற செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலமாக புகார் அனுப்பலாம். மேலும், 138 என்ற 24 மணி நேர உதவி மைய எண்ணை தொடர்புக் கொண்டு குரல்பதிவு மூலமும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்