Skip to main content

போட்டித் தேர்வு அறிவிப்பு: ஓவிய ஆசிரியர்கள் குழப்பம்.


             தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்வி தகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி
.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.

                அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், விளையாட்டு, இசை ஆகியவற்றில் பகுதி நேர ஆசிரியர்கள் 6,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 3 ஆயிரம் பேர் ஓவிய ஆசிரியர்களாக உள்ளனர். இவர்கள் முழுநேர ஆசிரியராக நியமனம் பெற, கடந்த ஜனவரியில் போட்டி தேர்வு அறிவிப்பை டி.ஆர்.பி., வெளியிட்டது. இத்தேர்வு ஜூன் 6ல் நடக்க உள்ளது. அறிவிப்பில் ஓவிய ஆசிரியர்களுக்கு எந்தவிதமான கல்வித்தகுதி தேவை என அறிவிக்கவில்லை. ஓவிய ஆசிரியர் நல்லகாசிராஜன் கூறியதாவது: இத்தேர்வு ஓவிய அறிவும், ஓவிய கல்வித்திறனையும் அடிப்படையாக கொண்டிருப்பதால், எந்தவித நிபந்தனையும் இன்றி, அனைவரையும் பங்கேற்க வாய்ப்பு தர வேண்டும். வரைதல், வண்ணம் தீட்டுதல் குறித்தும் எந்தவிபரமும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து டி.ஆர்.பி.,க்கும் தெரியப்படுத்தியுள்ளோம், என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்