Skip to main content

மருத்துவ அதிகாரி பதவிக்கு தேர்வுடி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி மருத்துவ அதிகாரி பணி காலியிடங்களுக்கு, மே 31ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும்' என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி
.எஸ்.சி., அறிவித்து உள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்ட அறிவிப்பு:தமிழக மருத்துவ பணிகள் துறையின், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி பிரிவில், உதவி மருத்துவ அதிகாரி பணிக்கு, 82 காலியிடங்கள் உள்ளன. சித்தா 63; ஆயுர்வேதா எட்டு; யுனானி மூன்று; ஹோமியோபதி ஒன்பது காலியிடங்கள் உள்ளன.இவற்றை நிரப்ப, நேரடித் தேர்வு நடத்தப்பட உள்ளது. எழுத்துத் தேர்வு,
இரண்டு தாள்களாக, மே 31ம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடக்கிறது. தகுதியானோர், தங்கள் விண்ணப்பங்களை, ஏப்ரல் 24ம் தேதி வரை, ஆன் - லைனில் பதிவு செய்யலாம். இத்தேர்வை எழுதுவதற்கான தகுதி, காலியிடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரங்கள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி