Skip to main content

பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம்

பிஎட் படிக்கும் ஆசிரியர்களுக்கு சலுகை பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம் : தமிழக அரசு உத்தரவு

அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பிஎட் படித்தால்பணிபுரியும் பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொ
ள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா வெளியிட்ட உத்தரவு:
ஊராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பிஎட் பயில்கின்றனர்.

இதற்காக இவர்கள் பள்ளிகளை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும்போது அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்படு கிறது. எனவே, அவர்கள் பணிபுரியும் பள்ளி ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியாக இருந்தால் பாதிப்பு மேலும் அதிகமாகிறது.எனவே, பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎட் பயிலும்போது உரிய அனுமதி பெற்று அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே பணிக்கு இடையூறு இன்றி பயிற்சி எடுக்கலாம்.இதேபோல தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி, நகராட்சி, உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அஞ்சல் வழிக்கல்வி மூலம் பிஎட் பயிலும்போது கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என ஆணை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை அரசால் ஆய்வு செய்யப்பட்டு, தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎட் படிக்கும்போது அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் 6, 7, 8ம் வகுப்புகளில் பயிற்சி மேற்கொள்ளலாம்.ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் கற்பித்தல் பயிற்சியை அவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கும் பள்ளிகளில் மேற்கொள்ள அனுமதிக்கலாம்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி