Skip to main content

பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?

 நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா?

இன்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் 
  1. ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது.   ஆங்கிலத்தில் "Probability of getting 3 heads and 3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.
  2. 5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண்  38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்டநாற்கரமானது ஒரு சாய்சதுரம் என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7) are the vertices of a rhombus.என்று உள்ளது.
மேற்காணும் தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு