Skip to main content

ஆசிரியர் தகுதி தேர்வு : இலவச பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) எழுத, இலவச பயிற்சி வகுப்பு நடைபெறஉள்ளதாக,மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மகரபூஷணம்
விடுத்துள்ள அறிக்கை:
சேலம் மாவட்டத்தில், பி.எட்., முடித்து, 2014 மார்ச், 31ம் தேதி முடிய வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பழங்குடியின பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வழிவகை செய்யும் வகையில், முதல்கட்டமாக சென்னை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு தகுதியுடைய மற்றும், 2014ம் ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள பி.எட்., முடித்த பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள், 2015 மார்ச், 31ம் தேதிக்குள், வேலை வாய்ப்பு பதிவு அட்டையுடன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கு தங்களது பெயரை, உத்தம சோழபுரத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்