Skip to main content

செல்போன் உடல் நலனுக்கு பாதிப்பில்லை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி

செல்போன் பயன்படுத்துவதால் உடல் நலனுக்கு பாதிப்பில்லை:இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி
செல்போன்,மனித வாழ்க்கையில் இன்றைக்கு முக்கியமானதொரு இடத்தை பிடித்து இருப்பது செல்போன்கள். ஆனால் செல்போனை பயன்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படுவதாக பரவலான கருத்துக்கள் இருந்து வந்தன.
செல்போன் பேசும் போதும் செல்போன் கோபுரங்களில் இருந்து வெ
ளிப்படும் கதிர்வீச்சுகளால் மனித சமுதாயத்துக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.ஆனால் செல்போன் உபயோகிப்பதால் உடல் நலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விளக்கம் அளித்து உள்ளது.
செல்போன் மற்றும் செல்போன் கோபுரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சுகாதார அமைச்சகத்தின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து இது குறித்து ஆராய்ச்சி நடத்தியது. இந்த ஆராய்ச்சி முடிவில் செல்போன் பேசுவதாலும், செல்போன் கோபுரங்களாலும் மனிதர்களுக்கு நோய் பற்றி மருத்துவரீதியாக எந்த ஆதாரங்களும் இல்லை என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உறுதி செய்து உள்ளது. இதுபற்றி மத்திய அரசுக்கு இந்த அமைப்புகள் அறிக்கை அளித்து உள்ளது.உலக சுகாதார அமைப்பு இதுதொடர்பாக கடந்த 2000 முதல் 2011 மே 31-ந் தேதி வரை நடத்திய ஆய்வு அறிக்கையில் இந்த தகவலை உறுதி செய்து உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா