Skip to main content

6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல்11-இல் தொடக்கம்


தமிழகம் முழுவதும் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 21 வரை நடைபெற உள்ளன.
1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு முப்பருவ முறை அமலில் உள்ளதால், இந்தத் தேர்வுகள் மூன்றாம் பருவத் தேர்வுகளாக நடைபெற உள்ளன.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கியது. பிளஸ்
1 வகுப்புக்கான தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கியது.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான தேர்வுகள் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளன.
பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மே முதல் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி