Skip to main content

எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி 54 மையங்களில் இன்று தொடங்குகிறது


கேரளாவில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி 54 மையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 2 ஆயிரத்து 964 மையங்கள் மூலம், மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 495 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள்.
தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, மாவட்ட வாரியாக மலப்புரம் மாவட்டத்தில் அதிகமாகவும், வயநாடு மாவட்டத்தில் குறைவாகவும் இருந்தது. அதிகபட்சமாக மலப்புரம் இடரிக்கோடு வி.கே.எம். பள்ளியில் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிந்து விடைத்தாள்கள் சீல் வைக்கப்பட்டு தேர்வு கட்டுப்பாட்டு அறைகளில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளன.

இன்று தொடங்குகிறது
அந்த விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அதற்காக மாநிலம் முழுவதும் 54 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.

இதில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, 2½ மணிநேரம் நடந்த தேர்வுக்கானது எனில் 18 விடைத்தாள்களும், 1½ மணி நேரம் நடந்த தேர்வுக்கானது எனில் 12 விடைத்தாள்களும் தினசரி வழங்கப்பட உள்ளது. அவற்றை அவர்கள் மதிப்பீடு செய்ய வேண்டும். தினமும் மதிப்பீடு செய்யும் விடைத்தாள்களின் மதிப்பெண் விவரங்களை கணினியில் பதிவு செய்யும் வசதி 54 மையங்களிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இது இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி ஆகும்.

16-ந் தேதி முடிவுகள்

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கேரளாவில் நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இந்த பணி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி வரை நடைபெறும். அதன்பின்னர் மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி நடைபெறும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்து ஏப்ரல் 16-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா