Skip to main content

பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 'சென்டம்' எடுப்பது கடினம்

பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் 'சென்டம்' எடுப்பது கடினம்: தேர்வெழுதிய மாணவ, மாணவிகள் கருத்து
ராமநாதபுரம்: நேற்று நடந்த பிளஸ் 2 வேதியியல் தேர்வில் 'சென்டம்' எடு
ப்பது கடினம் என தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் கூறினர்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று வேதியியல் தேர்வு நடந்தது. இதில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், பல கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் மாணவ, மாணவிகள் கூறினர்.

ஏ.ஜே.பிரதாப்சிங், கீழமுஸ்லீம் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி: வேதியியல் தேர்வில் பல கேள்விகள் எதிர்மறையாக கேட்கப்பட்டிருந்ததால் புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தது. ஒரு மார்க் வினாவில் 2 வது கேள்வி தவறாக இருந்தது. மேலும், 30 ஒரு மார்க் கேள்விகளில் 5 வினாக்கள் புத்தகத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுத்தேர்வில் கேட்கப்படாததாகவும், கடினமாகவும் இருந்தது. இந்த முறை 'சென்டம்' எடுப்பவர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.


வி.புவனேஷ் ராம், மாணவர், செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: ஒரு மதிப்பெண் கேள்விகளில் 1, 22 வது வினாக்கள் முதல் முறையாக இப்போது கேட்கப்பட்டிருந்தன. 3 மதிப்பெண் வினாவில் 'ஆர்கானிக்' பாடத்தில் இருந்து கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. மூலக்கூறுகள், சமன்பாடுகள் தீர்வு கடினமாக இருந்தன. 10 மதிப்பெண் வினாக்களில் 66 வது வினா குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சராசரி மாணவர்கள் 150 க்கு 110 மதிப்பெண்கள் வரை எடுக்கலாம்.

எஸ்.மகாலட்சுமி, கீழமுஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, பரமக்குடி: கடந்த 5 ஆண்டு பொதுத்தேர்வுகளில் கேட்கப்படாத பல கேள்விக் கேட்கப்பட்டிருந்தன. 5 மார்க்கில் 54 மற்றும் 63 வது கேள்விகள் சுற்றிவளைத்து கேட்கப்பட்டிருந்ததால், சிறிது நேரம் யோசித்து பின்னர் விடை எழுதினேன். 3 மார்க் வினாக்கள் ஓரளவிற்கு சுலபமாக இருந்தது. 10 மார்க் வினாக்கள் பரவாயில்லை. முக்கியமாக எதிர்பார்த்த பல கேள்விகள் வரவில்லை. புத்தகத்தை முழுமையாக படிக்காதவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்.

ஆர்.விவேகா, ஆசிரியை, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்: பாடத்திட்ட 'புளூ பிரின்ட்' படி கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்களில் சராசரி மாணவர் 30க்கு 22 மதிப்பெண் எடுக்கலாம். புத்தகத்தை முழுமையாக படித்தவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் எளிதாக விடையளித்திருக்க முடியும். 3 மதிப்பெண்களுக்கான கேள்விகளில் 45, 46, 47வது வினாக்கள் சராசரி மாணவர்களுக்கு சற்று கடினமானது. 5 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. 10 மதிப்பெண் வினாக்களில் 66 வது வினாவைத் தவிர அனைத்தும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. நன்றாக படிக்கும் மாணவர் முழு மதிப்பெண் பெறலாம்,” என்றார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா