Skip to main content

பிளஸ் 2 கணிதத்தேர்வு வினாத்தாளில் குழப்பம்: 'சென்டம்' குறைய வாய்ப்பு

பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு,'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு, கடினமாகவும் இருந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, கணிதத்தில்
, 'சென்டம்' வாங்குவோரின் எண்ணிக்கை குறையும் என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.
எதிர்பார்ப்பு:

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று கணிதம் - அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கணிதத்துக்கும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, விலங்கியலுக்கும் தேர்வு நடந்தது. கணித வினாத்தாள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 'ஈசி'யாகவும், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கடினமாகவும் இருந்தது. ஆண்டுதோறும் மாணவர்களும், ஆசிரியர்களும் சில வினா - விடைகளை எதிர்பார்ப்பர். சிறப்பு வகுப்புகள், திருப்புதல் தேர்வு, வகுப்பறைத் தேர்வுகள் போன்றவற்றில், அந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவற்றில் இருந்து, தேர்வில், 10 மதிப்பெண் வினாக்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்று, ஆசிரியர்கள் வழி காட்டுவர். ஆனால், நேற்றைய கணிதத் தேர்வில், சில வினாக்கள், இதுவரை தேர்வுகளில் கேட்காததாக இருந்தன. அதனால், மாணவர்கள், 'சென்டம்' வாங்குவது குறையும், என கல்வித் துறையினர் அச்சம் அடைந்துள்ளனர்.


இதுகுறித்து, கணித ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: இருநூறு மதிப்பெண்களுக்கு வினாத்தாள் இருந்தது. ஒரு மதிப்பெண்ணில் 40; ஆறு மதிப்பெண்களில், 10; 10 மதிப்பெண்களில், 10 வினாக்கள் எழுத வேண்டும்.

10 கேள்விகள்:

ஒரு மதிப்பெண் வினாக்களில், இரண்டு, 'வால்யூம்' புத்தகங்களில் உள்ள, 271 கேள்விகளில் இருந்து, 30 கேள்விகள்; 'கம் புக்' என்ற தொகுப்பு புத்தகத்தில் இருந்து, 10 கேள்விகள் கேட்கப்பட்டன. பத்து மதிப்பெண் வினாக்களில், 62 மற்றும், 63வது கேள்வி இதுவரை ஆசிரியர்களே எதிர்பார்க்காதது. தொகுதி - 2 புத்தகத்தில், 5ம் பாட வினாக்களை, பொதுவாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தவிர்த்து விடுவர். இதுவரை தேர்வில் இடம் பெறாத இந்தக் கேள்வி, 'சாய்ஸ்' அடிப்படையில் இந்த ஆண்டு இடம் பெற்றுள்ளது. இக்கேள்விகள், கடினமாக இருந்ததால், மாணவர்களின், 'சாய்ஸ்' குறைந்து, மற்ற கேள்விகளை எழுத தடுமாறினர். கட்டாய வினாவில், வகை நுண்கணித வினா கடினமாக இருந்தது. ஆண்டுதோறும் மாணவர்கள் எதிர்பார்க்கும் வெக்டரியலில், 'காஸ் ஏ பிளஸ் பி' என்ற வினா, இந்த ஆண்டு இடம் பெறவில்லை.

'எளிமை தான்':

மேலும், 69வது கேள்வியும் இதுவரை தேர்வுகளில் இடம் பெறாத, எதிர்பார்க்காத கேள்வி. நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு, 'சென்டம்' வாங்க கொஞ்சம் கடினமானதாகவே அமைந்துள்ளது. ஆனால், தேர்ச்சி இலக்கான மாணவர்களுக்கு கேள்விகள் எளிமை தான். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு நிலவரம் எப்படி?

கடந்த ஆண்டு, 3.5 லட்சம் மாணவ, மாணவியர் கணிதம் - அறிவியல் பிரிவில், கணிதத் தேர்வு எழுதினர். 8 சதவீதம் பேர் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம், 3,882 பேர் கணிதத்தில் 'சென்டம்' வாங்கினர். 2013ல், 2,352; 2012ல் 2,656 பேர் கணிதத்தில், 'சென்டம்' வாங்கினர்.

52 பேர்...:

பிளஸ் 2 கணித வினாத்தாள் கடினமாக இருந்ததால், காப்பியடிக்க முயற்சித்த, 52 மாணவ, மாணவியர் பறக்கும் படையினரிடம் பிடிபட்டனர். விலங்கியல் தேர்வில், ஒருவர் பிடிபட்டார்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு