Skip to main content

குரூப் - 2' தேர்வு முடிவு வெளியீடு


'குரூப் - 2' தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நேற்றிரவு, வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், 'குரூப் - 2' பதவிக்கான, 'மெயின்' தேர்வு நடந்தது. துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர்,
நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட, 1,130 பதவிகளுக்கு, மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின், தேர்வு எண்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வரும், 26ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு தேர்வருக்கும், தேதி மற்றும் நேரம் குறித்து, தனித்தனியாக, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

TN school lab Assistant Official Notification for Chennai

TN school lab Assistant Official Notification for Chennai

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன