Skip to main content

அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் 280 பேராசிரியர் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசி நாள்
அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி
விப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 10 கடைசித் தேதியாகும்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மதுரை, கோவை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மண்டல அலுவலகங்களும், அரியலூர், ஆரணி, திண்டுக்கல், காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, தூத்துக்குடி, திண்டிவனம், திருச்சி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் உறுப்புக் கல்லூரிகளும் உள்ளன.

இந்தக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக இருக்கும் 178 இணைப் பேராசிரியர் பணியிடங்களையும், 102 பேராசிரியர் பணியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இணைப் பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருக்க வேண்டியதோடு, 5 ஆண்டுகள் உதவிப் பேராசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பேராசிரியர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஆராய்ச்சிப் படிப்பு முடித்திருப்பதோடு, 13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதுகுறித்த மேலும் விவரங்களை www.annauniv.edu இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்