Skip to main content

21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ரூபாய் நோட்டு வெளியீடு

உற்பத்தி செலவு அதிகரித்ததால், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, கடந்த 1994-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதுபோல், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணி, 1995-ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது
. அதன்பிறகு, இந்த மதிப்பில் நாணயங்கள்தான் அச்சிடப்பட்டன.

இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு, புதிய ஒரு ரூபாய் நோட்டு அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநாத்ஜி கோவிலில் வைத்து, மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெரிஷி இந்த புதிய நோட்டை வெளியிட்டார்.


மற்ற ரூபாய் நோட்டுகளில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருக்கும். ஆனால், இந்த நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இரு மொழிகளில் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய நோட்டுடன், புழக்கத்தில் உள்ள பழைய ஒரு ரூபாய் நோட்டுகளும் செல்லும்.

110 மைக்ரான் திண்மை கொண்ட இந்த நோட்டு, முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் உள்ளது. நீர்க்குறியீட்டில், அசோகர் தூண் சின்னமும், வலதுபக்க ஓரத்தில் “பாரத்” என்ற வார்த்தை இந்தியில் மறைவாகவும் காணப்படுகிறது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்