Skip to main content

"வாட்ஸ்-அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: தேர்வு மையத்தில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராதது ஏன்?

"வாட்ஸ்-அப்'பில் பிளஸ் 2 வினாத்தாள்: தேர்வு மையத்தில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராதது ஏன்? அதிகாரிகள் விசாரணை
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம் வெளியிட்ட விவகாரத்தில், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு வராதது ஏன் என்பது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 வினாத்தாளை கட்செவி அஞ்சல் மூலம் வெளியிட்ட ஆசிரியருக்கு ஒசூரில் உள்ள குறிப்பிட்ட அந்தத் தேர்வு மையத்தில் பணி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அந்தத் தேர்வு மையத்தில் தேர்வுப் பணிக்கு வர வேண்டிய 7 ஆசிரியர்கள் ஒரே நாளில் பணிக்கு வராததாலேயே கூடுதல் ஆசிரியர்கள் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அந்தக் கூடுதல் ஆசிரியர்களில் ஒருவர்தான் பிளஸ் 2 கணித வினாத்தாளை படம் எடுத்து கட்செவி அஞ்சல் மூலம் வெளியில் அனுப்பியுள்ளார்.
வழக்கமாக, தேர்வுப் பணிகளுக்கு ஓரிரு ஆசிரியர்கள் தவிர்க்க இயலாத காரணங்களால் பணிக்கு வராமலிருப்பது வழக்கமானதுதான். ஆனால், ஒரே நாளில் 7 ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் இது தொடர்பாகவும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிளஸ் 2 கணிதத் தேர்வில் தேர்வறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர் மகேந்திரன் கட்செவி அஞ்சல் மூலம் வினாத்தாளை சக ஆசிரியர்களான கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக 4 ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி