Skip to main content

பிளஸ் 2 வேளாண் தேர்வில் 59 மதிப்பெண் போச்சு


தொழிற்கல்வியில், வேளாண் செயல்முறை கள் பாடத்துக்கு, 'தியரி' தேர்வை, தமிழகம் முழுவதும், 12 ஆயிரம் பேர் நேற்று எழுதினர். இந்தப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றால், பி.எஸ்.சி., அக்ரி மற்றும் கால்நடை மருத்
துவ கல்லூரி பட்டப்படிப்புக்கு செல்லலாம். ஆனால், வேளாண் செயல்முறைகள் பாட வினாத்தாளில், 59 மதிப்பெண்களுக்கான, 13 வினாக்கள் மாணவர்களுக்கு புரியாத வகையில் இடம் பெற்றுள்ளன.
இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 'அக்ரி' மாணவர்களுக்கு, 'புளூ பிரின்ட்' மற்றும் புத்தகத்தின் பின்புறத்தில் இல்லாத, புதிய கேள்விகள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக, 45வது கேள்வியில், 'சொலனேசிய' குடும்பப் பயிர் கலை மற்றும் உர நிர்வாகம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு, 'சொலனேசியா' என்றால் தெரியாது. நன்செய் பயிர் குறித்து, 47வது கேள்வி இடம் பெற்றுள்ளது. ஆனால், தோட்டக்கால் பயிர் தான் மாணவர்கள் கற்றுள்ளனர், என்றனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்