Skip to main content

செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல் 1 முதல் அமல்


நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான
அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார். அப்போது, சில பொருள்கள் மீது வரிச் சலுகைகளை அறிவித்தார்.
அதன்படி, நெய்தலுக்கு முன்பாக நூலுக்குப் பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏலக்காய் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியானது, 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், செல்லிடப் பேசிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 14.5 மதிப்புக் கூட்டு வரியானது 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், அவை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வணிக வரிகள் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில், மூன்று வகையான பொருள்கள் மீதான வரி விலக்கும், வரி குறைப்பும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா