Skip to main content

செல்லிடப்பேசி உள்ளிட்ட பொருள்களுக்கான வரிச் சலுகைகள் ஏப்ரல் 1 முதல் அமல்


நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் அனைத்தும் வரும் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதற்கான அரசின் உத்தரவு, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை முதல்வரும், நிதியமை
ச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார். அப்போது, சில பொருள்கள் மீது வரிச் சலுகைகளை அறிவித்தார்.
அதன்படி, நெய்தலுக்கு முன்பாக நூலுக்குப் பசையிடுவது தொடர்பான ஒப்பந்தப் பணிகளுக்கு மதிப்புக் கூட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஏலக்காய் மீது இப்போது விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியானது, 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், செல்லிடப் பேசிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த 14.5 மதிப்புக் கூட்டு வரியானது 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது என்று பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில், அவை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை வணிக வரிகள் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் புதன்கிழமை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில், மூன்று வகையான பொருள்கள் மீதான வரி விலக்கும், வரி குறைப்பும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்