Skip to main content

'தினமலர்' செய்தி எதிரொலி: 12 கருணை மதிப்பெண் வழங்க உத்தரவு


பிளஸ் 2 வேளாண் செயல்முறைகள் தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை அடிப்படையில், 12 மதிப்பெண் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குளறுபடியான கேள்விகள் குறித்து, நமது நா
ளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், மார்ச், 20ம் தேதி, அரசியல் அறிவியல், புள்ளி யியல், நர்சிங் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கு, தேர்வுகள் நடந்தன. தொழிற்கல்வி பாடமான வேளாண் செயல்முறைகள் தேர்வில், 13 வினாக்கள், புரியாத வகையில் இடம் பெற்றிருந்தன. இதனால், மாணவர்கள் திணறினர்.
விடை எழுத முடியாமல் தவிப்பு:
தோட்டக்கால் பயிர் குறித்து இடம் பெற்ற, 47வது கேள்விக்கு, மாணவர்கள் விடை எழுத முடியாமல் தவித்தனர். ஏனெனில், பாடப்புத்தகத்தில், நன்செய் பயிர் குறித்து தான் அவர்கள் படித்துள்ளனர். நன்செய் பயிர் தான் தோட்டக்கால் பயிர் என்பது பாடத் திட்டத்தில் இல்லை. இதுகுறித்து, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், தேர்வுத்துறை மற்றும் கல்வித்துறைக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன. தவறான வினா குறித்த செய்தி, நமது நாளிதழில் மார்ச், 21ம் தேதி செய்தி வெளியானது.


வினாக்கள் குளறுபடி:
இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள், வேளாண் செயல்முறைகள் வினாத்தாள் தயாரித்த ஆசிரியர் கமிட்டியிடம் விசாரணை நடத்தினர். இதில், வினாக்கள் குளறுபடியாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வேளாண் செயல்முறைகள் தேர்வில், நன்செய் பயிர் குறித்த, 10 மதிப்பெண் கேள்வி; ஒரு மதிப்பெண்ணுக்கான, மூன்றாவது மற்றும் நான்காவது கேள்விக்கு, மொத்தம், 12 கருணை மதிப்பெண் வழங்க, விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழக வேளாண் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி