Skip to main content

11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை

கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டி
யது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.

==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக 15 * 17 ஐ எடுத்துக்கொள்வோம். இதில் முதல் எண்ணாண 15ஐ முழுமையாகவும், இரண்டாவது எண்ணான 17ல் 7ஐ மட்டும் எடுத்துக்கொண்டு கூட்டிக்கொள்வோம்.


15 + 7 = 22

==> இதன் மூலம் வரும் கூட்டல் விடையை 10 ஆல் பெருக்க வேண்டும். வரும் விடையை தனியாக எடுத்தெழுதி கொள்க.

22 * 10 = 220

==> அடுத்து, பெருக்க வேண்டிய இரண்டு எண்ணிலும் உள்ள கடைசி எண்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஒன்றை ஒன்று பெருக்கிக் கொள்க.

15 * 17 = 5 7
5 * 7 = 35

==> தற்போது வந்த விடையையும், ஏற்கனவே 10ஆல் பெருக்க கிடைத்த விடையையும் கூட்டிக்கொள்ள, இறுதி பெருக்கல் விடை கிடைத்து விடும்.

220 + 35 = 255
ஃ 15* 17 = 255...

மற்றுமொரு உதாரணமாக

18 * 14 = ?
(18+4) * 10 = 220
8*4 = 32
220 + 32
------
252
------
ஃ 18 * 14 = 252....

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா