Skip to main content

ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெபோ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது. இந்த வட்டி குறைப்பு காரணமாக வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக்கடன், வாகன கடன்
களுக்கான வட்டி குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

இந்நிலையில், ரூ.10 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களில் சில சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. பொதுவாக வீடுகளை வாங்கும்போது அதில் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் என வீட்டின் விலையில் 15 சதவீதம் அளவுக்கு செலவு நீள்வது வழக்கம். இது வீடு 
வாங்குவோர்க்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இதை போக்கவும், நியாயமான விலையில் வீடுகள் கிடைக்கவும் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை தளர்த்தியுள்ளது. அதாவது, ரூ.10 லட்சத்திற்குட்ட வீடுகளை வாங்கும்போது அதற்காகும் பத்திர செலவு, பதிவுக்கட்டணம் மற்றும் மற்ற டாக்குமண்டேஷன் கட்டணத்தை வாங்கிய வீட்டுக்கடன் விகிதத்திலேயே (LTV (loan to value) ratio) செலுத்தினால் போதுமானது. தற்போது நடைமுறையில், வங்கிகள் இம்மூன்று கட்டணத்தையும் வீட்டின் மதிப்பில் சேர்ப்பதில்லை என்பது நினைவு கூரத்தக்கது. 

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்