Skip to main content

உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள்: இந்த முறையும் இடம் பிடிக்காத இந்தியா




’தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷன்’ எனும் பத்திரிகை உலக அளவில் கல்வித்துறையில் சிறப்பான சேவை வழங்கும் மிகவும் மதிப்புமிக்க 100 பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்து வருடந்தோறும் பட்டியல் வெளியிடும். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள 2015
-ம் ஆண்டிற்கான பட்டியலில் இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் கூட இடம்பெறவில்லை.
சிறப்பு மிக்க இந்த பட்டியலில் உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகமாக அமெரிக்காவில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஹார்வேர்ட் பல்கலைக்கழகம் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கேம்பிரிஜ்ட் பல்க‌லைக்கழகமும் இதைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு பல்‌க‌லைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்க‌லைக்கழகங்களும் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தி டைம்ஸ் ஹையர் எஜூகேஷனின் ஆசிரியர் பில் பேட்டி கூறுகையில் “மிகப் பெருமையான அறிவார்ந்த வரலாறும், பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் மிகப்பெரிய நாடான இந்தியாவில், உலகின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழமாக தேர்ந்தெடுக்கப்படுமளவிற்கு ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லையென்பது கவலையளிக்கக் கூடிய ஒன்று“  என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்