Skip to main content

பிளாஸ்டிக் கழிவில் செங்கல்: பேராசிரியர் - மாணவர் கண்டுபிடிப்பு


உள்ளாட்சி அமைப்புகளால் வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகளில் இருந்து செங்கல், டைல்ஸ் தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியின் தாவரவியல் துறை பே
ராசிரியர் ராஜேந்திரன், கலசலிங்கம் பல்கலை சிவில் துறை மாணவர் மனோஜ் பிரபாகர் இணைந்து இந்த புதிய தயாரிப்பை கண்டுபிடித்துள்ளனர். உள்ளாட்சி அமைப்புகள் திடக்கழிவு மேலாண்மை செய்வது சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. அதில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் நடைமுறைகள் வெற்றிகரமாக இல்லை. குறிப்பாக 20 முதல் 100 மைக்ரான் கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் எரியூட்டப்பட்டு அழிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து கட்டுமான பணிகளுக்கு உதவும் செங்கல், டைல்ஸ் போன்ற பொருட்களை தயார் செய்துள்ளனர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் கழிவுகளை சிறு துண்டுகளாக்கி, தண்ணீரில் சுத்தம் செய்து உலர்த்தப்பட்ட பின், குறிப்பிட்ட அளவு தாருடன் சேர்த்து உருக்க வேண்டும். இந்த கலவையுடன் உலர்ந்த விவசாயக் கழிவுகளை சேர்த்து கலவையாக்கி அச்சுகளில் விட்டு தேவையான வடிவங்களில் செங்கல், டைல்ஸ் தயாரிக்கலாம்.இந்த தயாரிப்பில் இவை தண்ணீரை உறிஞ்சுவதில்லை. வெப்பத்தாலும் இவை தன் நிலையை இழப்பதில்லை. எடை குறைவாகவும் இருக்கும். இவற்றை மாடியில் பதித்து மாடித்தோட்டங்களை வளர்க்கலாம். கான்கிரீட்டுகளில் நீர்புகாது. நகராட்சி, மாநராட்சிகளில் சேரும் பிளாஸ்டிக் குப்பைகளை இது போன்ற தயாரிப்புகளுக்கு பயன்படுத்தினால், குப்பைகளை அழிப்பதற்கும் ஒரு தீர்வாக அமையும் என்றனர். தொடர்புக்கு 94439 98480.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்