Skip to main content

ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்


தமிழகத்தில் ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி குற்றிகாட்டுவிளையை சேர்ந்த ராஜாசிங் தாக்க
ல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்விக் கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் என கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. தமிழக அரசின் பள்ளிக் கல்வி கட்டண வரைமுறைச் சட்டம் ஐ.சி.எஸ்.இ., பாடத் திட்டங்களை பின்பற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என ஒரு வழக்கில் ஐகோர்ட் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. ஐ.சி.எஸ்.இ.,பாடத் திட்டப்படி கற்பிக்கும் பள்ளிகளுக்கு இதுவரை அரசு கல்விக் கட்டணம் நிர்ணயிக்காததால் விருப்பம்போல் வசூலிக்கின்றனர். கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட பின் அப்பள்ளிகள் விதிகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்கின்றனவா? என கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தனியார் பள்ளிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக்குழு தனி அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது. மனுதாரர் வக்கீல் ஈ.வி.என். சிவா ஆஜரானார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்