Skip to main content

அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்

அண்ணாமலை பல்கலையில் விடைத்தாள் மாயம்:தேர்வுத்துறை அலட்சியம்: அதிகாரிகள் அதிர்ச்சி
அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை, இருப்பு அறையில் இருந்த மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மாயமானதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டம், சிதம்
பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் காரணமாக, பல்கலைக்கழகத்தை, அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.தமிழக அரசு முதன்மைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நிர்வாக சிறப்பு அதிகாரியாகநியமிக்கப்பட்டார்.

மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் போது அவற்றுக்கு, 'டம்மி' எண் கொடுத்து திருத்தம் செய்து, தேர்வுத் துறை கட்டடத்தில் உள்ள விடைத்தாள் கட்டுகள் இருப்பு வைக்கும் அறையில் வைக்கப்படும்.அவ்வாறு வைக்கப்பட்ட, கடந்த செமஸ்டரின், 
பி.எஸ்சி., - - எம்.எஸ்சி., தேர்வு எழுதிய, 550 மாணவர்களின், 22 வினாத்தாள் கட்டுகளை காணவில்லை.தேர்வுத்துறை இயக்குனரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் இந்த அறையை, அதற்கென உள்ள தனி அலுவலர்கள் மட்டுமே திறக்க முடியும். அப்படியிருக்கும் போது விடைத்தாள்கள் காணாமல் போனது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.நேற்று காலை, நிர்வாக அதிகாரி சிவ்தாஸ் மீனா, விடைத்தாள் வைக்கப்பட்டிருந்த அறையை ஆய்வு செய்து, அலுவலர்களிடம் விசாரணை நடத்தினார். அதில், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விடைத்தாள்களை தேடும் பணி நடக்கிறது.

'டூப்ளிகேட்' சாவிகளால்தொடரும் தில்லுமுல்லு!
தேர்வுத் துறையில் விடைத்தாள் இருப்பு அறை பூட்டின் சாவி, அனைத்து அலுவலக உதவியாளர்களிடமும் உள்ளது. தில்லுமுல்லு நடப்பதை அறிந்து, புதிய பூட்டு போட்டால், அடுத்த சில நாட்களில், 'டூப்ளிகேட்' சாவி போட்டு அனைத்து, அலுவலக உதவியாளர்களும், புதிய சாவியை வைத்துக் கொள்வது வழக்கம்.
அதனால் தான், தேர்வுத் துறையில் சர்வ சாதாரணமாக விடைத்தாள்கள் மாற்றம், மதிப்பெண்கள் திருத்தம் போன்ற தில்லுமுல்லு வேலைகள் நடப்பதாக, அங்குள்ள ஊழியர்கள் புலம்புகின்றனர். என்ன தான் அதிகாரிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், முறைகேடு நடப்பது தொடர்கதையாகவே உள்ளது.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்